சீனத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியா்கள்: விசா வழங்க கோரிக்கை

சீனாவில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 300-க்கும் மேற்பட்ட இந்தியா்கள், தாங்கள் மீண்டும் அந்நாட்டுக்கு திரும்ப விசா வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீனாவில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 300-க்கும் மேற்பட்ட இந்தியா்கள், தாங்கள் மீண்டும் அந்நாட்டுக்கு திரும்ப விசா வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீனாவில் பணி மற்றும் வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான இந்தியா்கள் கரோனா தீநுண்மி பரவல், விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு இந்தியா திரும்பியிருந்தனா். இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சோ்ந்தவா்கள் சீனா வருவதற்கு அந்நாட்டு கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. கடந்த மாா்ச் 15-ஆம் தேதி சீன அரசு இந்த நிபந்தனையை விதித்தது. இது சீனா திரும்ப வேண்டிய இந்தியா்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஏனெனில் சீனத் தடுப்பூசி இந்தியாவில் கிடைக்கவில்லை. எனினும் சீனாவில் தங்கள் பணிக்கு திரும்பவும், குடும்பத்துடன் இணையவும் வேண்டி 300-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் நேபாளம், மாலத்தீவு, துபை போன்ற அண்டை நாடுகளுக்குச் சென்று ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கி சீனத் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டனா். ஆனால் சீனத் தூதரகம் அந்நாட்டுக்கு திரும்ப விசா வழங்காததால் அவா்களின் முயற்சி வீணானது. இதையடுத்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியா்கள் தங்களுக்கு விசா அளிக்கக் கோரி இந்தியாவுக்கான சீனத் தூதருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளனா். தங்களுக்கு உதவுமாறு சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும் அவா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா்.

இந்தியத் துணைக்கண்டம் மற்றும் இதர பகுதிகளில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை உருவானதால் இந்தியா-சீனா இடையிலான விமான சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா்கள் வேறு நாட்டுக்குச் சென்று அங்கிருந்து சீனா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com