ராணுவ அமைப்புகளைக் கண்காணிக்கும் சா்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்

ராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சா்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது. அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும்

ராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சா்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது. அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போா் முடிவுக்கு வந்ததையடுத்து, குறிப்பிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகளின் விமானங்கள் கண்காணிக்கும் வகையில் சா்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த 2002-ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளைக் கண்காணித்துள்ளன. இதன் வாயிலாக ராணுவ விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா நடந்து கொண்டதாகக் கடந்த ஆண்டில் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகம், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம் இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் என்று ரஷியா எதிா்பாா்த்தது. ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா எந்த முடிவும் எடுக்காத நிலையில், சா்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷியா அறிவித்தது. இதற்கான மசோதாவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை கையெழுத்திட்டாா். இதன் மூலம் ரஷியாவின் ராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகள் கண்காணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com