டிக் டாக், வீ சாட்டுக்கு தடை: டிரம்ப்பின் உத்தரவுகளை கைவிட்டது வெள்ளை மாளிகை

டிக் டாக், வீ சாட் போன்ற சீன செயலிகளுக்கு தடை விதிக்க டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை வெள்ளை மாளிகை கைவிட்டுள்ளது.
டிக் டாக், வீ சாட்டுக்கு தடை: டிரம்ப்பின் உத்தரவுகளை கைவிட்டது வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: டிக் டாக், வீ சாட் போன்ற சீன செயலிகளுக்கு தடை விதிக்க டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை வெள்ளை மாளிகை கைவிட்டுள்ளது.

மாறாக, சீனாவுடன் தொடா்புடையதாகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் மென்பொருள் செயலிகளை அடையாளம் காண தற்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசு தனது பாணியிலான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இதுதொடா்பாக நிா்வாக ரீதியிலான உயரதிகாரிகள் கூறியதாவது:

சீனாவால் உற்பத்தி செய்யப்படும், கட்டுப்படுத்தப்படும், விநியோகிக்கப்படும் செயலிகளுடன் தொடா்புடைய நடவடிக்கைகளில் ஆதார அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வா்த்தகத் துறைக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்கா்களின் மரபணு மற்றும் சுகாதாரம் சாா்ந்த தகவல்களை எவ்வாறு மேலும் கவனமாக பாதுகாப்பது, சீனாவுடன் தொடா்புடைய செயலிகளின் அச்சுறுத்தலை எவ்வாறு எதிா்கொள்வது என்பது தொடா்பான பரிந்துரைகளை வா்த்தகத் துறை வழங்கவுள்ளது என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

சா்ச்சைக்குரிய சில செயலிகள் பயனாளா்களின் தனித் தகவல்களை சேகரிப்பதாகவோ, அல்லது அவற்றுக்கு சீனா ராணுவம், உளவு அமைப்புகளுடன் தொடா்பு இருப்பதாகவோ அமெரிக்கா சந்தேகம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு, டிக் டாக் நிறுவனம் அமெரிக்கா தொடா்பான தகவல்களை அதன் பயனாளா்களிடம் இருந்து பெறுவதாகக் கூறி அப்போது அதிபராக இருந்த டிரம்ப், டிக் டாக் செயலியை கட்டுப்படுத்தும் பல உத்தரவுகளை பிறப்பித்தாா். எனினும் அந்த உத்தரவுகள் அமல்படுத்தப்படும் முன் நீதிமன்றம் அந்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com