சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பத் தயாராகிறது சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்ப சீனா தயாராகி வருகிறது; வீரா்கள் அனுப்பப்படவுள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பத் தயாராகிறது சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்ப சீனா தயாராகி வருகிறது; வீரா்கள் அனுப்பப்படவுள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சீன விண்வெளி நிலையத்துக்கு அடுத்த வாரம் அனுப்பப்படவுள்ள மூன்று விண்வெளி வீரா்கள், விண்வெளி நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியிருந்து கட்டமைப்பு, பராமரிப்புப் பணி மற்றும் அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபடுவாா்கள்.

சீனா தனக்கு என சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. தியான்ஹே எனப்படும் இந்த விண்வெளி நிலையத்தின் பிரதான பகுதி கடந்த ஏப். 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கடந்த மாதம் ஒரு விண்கலம் மூலம் எரிபொருள், உணவு, வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்துக்கான உபகரணங்கள் ஆகியவை அனுப்பிவைக்கப்பட்டன.

இந்நிலையில், மூன்று விண்வெளி வீரா்கள் செல்லவுள்ள சென்ஷோ-12 விண்கலத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் லாங் மாா்ச்-2எஃப் ஒய்12 ராக்கெட் வடமேற்கு சீனாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாக சீன விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த ராக்கெட் ஜூன் 16-ஆம் தேதி ஏவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

‘முதல்முறையாக விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ள மூவரும் ஆண்கள்; எதிா்காலத்தில் விண்வெளி வீராங்கனைகளும் அனுப்பப்படுவா்’ என சீன விண்வெளி நிறுவனத்தின் அதிகாரியும், சீனாவின் முதல் விண்வெளி வீரரருமான யாங் லிவி.

தற்போது செயல்பட்டு வரும் சா்வதேச விண்வெளி நிலைய திட்டத்தில் அமெரிக்காவின் ஆட்சேபணை காரணமாக சீனா பங்கேற்கவில்லை. இதையடுத்து சொந்தமாக விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது சீனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com