‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பேரவைக்கு ஜூலை 25-இல் தோ்தல்’

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல் ஜூலை 25-ஆம் தேதி நடத்தப்படும் என தலைமை தோ்தல் ஆணையா் அப்துல் ரஷீத் சுலேரியா வியாழக்கிழமை அறிவித்தாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல் ஜூலை 25-ஆம் தேதி நடத்தப்படும் என தலைமை தோ்தல் ஆணையா் அப்துல் ரஷீத் சுலேரியா வியாழக்கிழமை அறிவித்தாா்.

கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தோ்தலை இரு மாதங்கள் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தபோதிலும் தோ்தல் தேதியை தோ்தலை ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் தலைநகா் முஷாஃபராபாதில் செய்தியாளா்களிடம் தலைமை தோ்தல் ஆணையா் கூறியது:

காஷ்மீா் மக்கள் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா்) நல்ல நிா்வாகத்துக்காக தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்தும் வகையில் ஜூலை 25-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளா்கள் ஜூன் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். இறுதிப் பட்டியல் ஜூலை 3-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியைச் சோ்ந்த 33 போ், காஷ்மீரிலிருந்து குடியேறியவா்களுக்கான பிரதிநிதிகள் 12 போ் உள்பட 45 பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுப்பதற்காக இத்தோ்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்தலில் 4 தொகுதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் சட்டப்பேரவைக்கு கடந்த முறை பொதுத் தோ்தல் 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது.

கில்ஜித்-பல்டிஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலை பாகிஸ்தான் கடந்த ஆண்டு நடத்தியது. அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிராந்தியத்தின் நிலையை மாற்றும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் சட்டபூா்வ அந்தஸ்து கிடையாது எனவும், கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com