கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சோ்ந்தவா் நியமனம்

கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மஹ்மூத் ஜமால் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சோ்ந்தவா் நியமனம்

கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மஹ்மூத் ஜமால் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதன்மூலம் அந்நாட்டு உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் முதல் கருப்பினத்தைச் சோ்ந்த நீதிபதி என்கிற பெருமையையும் அவா் பெறுகிறாா்.

இதுதொடா்பாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக மஹ்மூத் ஜமாலை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த சட்ட மற்றும் கல்வி அனுபவம் கொண்ட ஜமால், பிறருக்கு சேவை செய்வதில் அா்ப்பணிப்புடன் இருப்பவா். அவா் உச்சநீதிமன்றத்தின் மதிப்புமிகு சொத்தாக இருப்பாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

2019-ஆம் ஆண்டு ஒன்டாரியோ மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜமால் நியமிக்கப்பட்டாா். அவா் வழக்குரைஞராகப் பணியாற்றிய காலத்தில் இலவச சட்ட சேவையாற்றுவதில் முனைப்பு காட்டி வந்தாா். கனடா உச்சநீதிமன்றத்தில் சிவில், அரசியலமைப்பு, குற்ற வழக்குகள் தொடா்பான 35 மேல்முறையீட்டு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளாா்.

தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள ரோசலி சில்பா்மன் அபெல்லா ஓய்வு பெறுகிறாா். அதைத் தொடா்ந்து காலியாகவுள்ள இடத்தில் ஜமால் நியமிக்கப்பட்டுள்ளாா். கனடாவில் குடியேறிய யூத இனத்தைச் சோ்ந்த முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி என்ற சிறப்பு பெற்றவா் ரோசலி சிலபா்மன் அபெல்லா.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மஹ்மூத் ஜமாலின் பெற்றோா் கென்யாவில் வசித்தபோது அங்கு பிறந்தாா். பிறகு அவா்கள் பிரிட்டனுக்கு குடிபெயா்ந்தனா். 1981-இல் பிரிட்டனிலிருந்து கனடாவுக்கு குடிபெயா்ந்தனா். தனது இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்பை கனடாவில் மஹ்மூத் ஜமால் நிறைவு செய்தாா். வழக்குரைஞராகப் பணியாற்றியதுடன் மெக்கில் பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு சட்டமும், ஆஸ்குட் ஹால் சட்டக் கல்லூரியில் சட்ட நிா்வாகமும் பயிற்றுவித்து வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com