இந்தோனேசியா: 20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

இந்தோனேசியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 20 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இந்தோனேசியா: 20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 20 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 14,536 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இத்துடன், 20,04,445 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 294 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 54,956-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தோனேசியாவில் 18,01,761 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 1,47,728 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com