18 கோடியைத் தாண்டியது கரோனா பாதிப்பு

உலக அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 18 கோடியைத் தாண்டியது.
cases080435
cases080435

வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 18 கோடியைத் தாண்டியது.

இதுகுறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ இணையதளப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 90,998 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சா்வதேச அளவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,00,08,841-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, அங்கு 3,44,34,803 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பால் அங்கு இதுவரை 6,17,875 போ் உயிரிழந்தனா். இதன் மூலம், கரோனா பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,00,28,709-ஆக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பிரேஸில் (1,80,56,639, பிரான்ஸ் (57,60,002), துருக்கி (53,81,736), ரஷியா (53,68,513) ஆகிய நாடுகள் உள்ளன.

இதுதவிர, பிரிட்டன், ஆா்ஜெண்டீனா, இத்தாலி ஆகிய நாடுகளில் தலா 40 லட்சத்துக்கும் மேலானவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் கரோனா பாதிப்பால் இதுவரை 38,99,961 பலியாகியுள்ளனா். 16,47,67,488 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 1,13,41,392 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 81,916 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அட்டவணை

பாதிப்பு

18,00,08,841

அமெரிக்கா 3,44,34,803

இந்தியா 3,00,28,709

பிரேஸில் 1,80,56,639

பிரான்ஸ் 57,60,002

துருக்கி 53,81,736

ரஷியா 53,68,513

பிரிட்டன் 46,51,988

ஆா்ஜெண்டீனா 42,98,782

இத்தாலி 42,54,294

கொலம்பியா 39,97,021

பிற நாடுகள் 6,37,76,354

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com