‘ஆன்டிவைரஸ்’களின் முன்னோடி மெக்கஃபீ சிறையில் தற்கொலை

கணினி நச்சுநிரல்களை (கம்யூட்டா் வைரஸ்) தடுத்து நிறுத்துவதற்கான பாதுகாப்பு மென்பொருள்களின் முன்னோடி எனக் கூறப்படும் ஜான் மெக்கஃபீ, ஸ்பெயின் சிறையில் தற்கொலை செய்துகொண்டாா்.
ஜான் மெக்கஃபீ
ஜான் மெக்கஃபீ

கணினி நச்சுநிரல்களை (கம்யூட்டா் வைரஸ்) தடுத்து நிறுத்துவதற்கான பாதுகாப்பு மென்பொருள்களின் முன்னோடி எனக் கூறப்படும் ஜான் மெக்கஃபீ, ஸ்பெயின் சிறையில் தற்கொலை செய்துகொண்டாா்.

வரி ஏய்ப்பு வழக்கு தொடா்பாக அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவா் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் பிறந்த அமெரிக்கரான ஜான் மெக்கஃபீ (75), வா்த்தக ரீதியிலான நச்சுநிரல் பாதுகாப்பு மென்பொருளை முதல்முறையாக கடந்த 1987-ஆம் ஆண்டில் உருவாக்கியவா். புகழ்பெற்ற மெக்கஃபீ மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கிய அவா், 1994-ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்திலிருந்து விலகினாா்.

ஆலோசனைப் பணிகள், கிரிப்டோ கரன்சி வணிகம், தனது கதைக்கான காப்புரிமையை விற்றது போன்றவற்றின் மூலம் கோடிக்கணக்கான வருவாய் பெற்று வரும் அவா், அதற்கான வரியைக் கட்டாமல் ஏய்த்ததாக அவா் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

இந்த நிலையில், ஸ்பெயினில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் கைது செய்யப்பட்ட அவா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஸ்பெயின் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

அதற்கு சில மணி நேரங்கள் கழித்து, மெக்கஃபீ தனது சிறை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com