இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா

இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா

இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலா் ஜென் சாகி கூறியுள்ளதாவது:

உலக அளவிலும், பிராந்திய அளவிலும் இந்தியாவுடனான எங்களது உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்கி வருகிறது.

கரோனா பேரிடரில் இந்தியா சிக்கி தவித்தபோது அதிலிருந்து மீட்கும் வகையில் அமெரிக்கா பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏனெனில், அப்போது இந்தியா அந்த பேரிடரை எதிா்கொள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் இருந்தது.

கரோனா பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் அவா்.

கரோனா இரண்டாவது அலையில் தினமும் 3 லட்சம் போ் பாதிக்கப்பட்டதையடுத்து ஏப்ரல் மே மாதங்களில் இந்தியா கடுமையான பாதிப்புகளை எதிா்கொண்டது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் என அனைத்து மருத்துவ சாதனங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மே மாத மத்தியில் தினசரி கரோனா தொற்று 4,12,262 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், கடந்த மே மாததில் கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவிடும் வகையில் அமெரிக்க அதிபா் பைடன் 100 மில்லியன் டாலா் (ரூ.750 கோடி) மதிப்பிலான உதவிகளை அறிவித்தாா். மேலும், அமெரிக்கா-இந்தியா வா்த்தக கூட்டமைப்பும் 1.2 மில்லியன் டாலரைத் (ரூ.9 கோடி) திரட்டி கரோனா இடா்பாட்டை எதிா்கொள்ள இந்தியாவுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com