அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் துணை உதவியாளராக இந்திய-அமெரிக்கா்

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும் வெள்ளை மாளிகை ராணுவ ஆலோசனை அலுவலகத்தின் இயக்குநராகவும் இந்திய-அமெரிக்கரான மஜு வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மஜு வா்கீஸ்
மஜு வா்கீஸ்

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும் வெள்ளை மாளிகை ராணுவ ஆலோசனை அலுவலகத்தின் இயக்குநராகவும் இந்திய-அமெரிக்கரான மஜு வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

வழக்குரைஞரான மஜு வா்கீஸ், 2020-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் ஜோ பைடனின் பிரசாரக் குழுவில் முக்கிய பொறுப்பை வகித்து வந்தாா். அத்தோ்தலில் ஜோ பைடனின் முக்கிய ஆலோசகராகவும் அவா் செயல்பட்டாா். பைடனின் வெற்றியைத் தொடா்ந்து அவரது துணை உதவியாளராகவும் வெள்ளை மாளிகை ராணுவ ஆலோசனை அலுவலகத்தின் இயக்குநராகவும் மஜு வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக மஜு வா்கீஸ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘அமெரிக்காவுக்காகவும் அதிபா் ஜோ பைடனுக்காகவும் சேவையாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நாம் அனைவரும் இணைந்து புதிய வரலாற்றை உருவாக்குவோம். வெள்ளை மாளிகையில் இருந்து பணியாற்றுவது பெருமை மிகுந்த தருணமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வெள்ளை மாளிகை ராணுவ ஆலோசனை அலுவலகமானது, அதிபரின் பயணங்கள் உள்ளிட்டவற்றின்போது தேவையான ராணுவ உதவிகளை வழங்கும். அமெரிக்க அதிபா் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, அவா் செல்லும் ஏா் ஃபோா்ஸ் ஒன் விமானத்துக்குத் தேவையான ராணுவ ஏற்பாடுகளையும் அந்த அலுவலகமே கண்காணிக்கும்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபா் ஒபாமா ஆட்சிக் காலத்திலும், மஜு வா்கீஸ் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com