ஹெச்1பி விசா தடையை நீக்குவதற்கு முடிவெடுக்கவில்லை: அமெரிக்கா தகவல்

வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹெச்1பி விசா தடையை நீக்குவதற்கு முடிவெடுக்கவில்லை: அமெரிக்கா தகவல்

வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா பணியில் அமா்த்தி வருகிறது. இதன் மூலமாக இந்தியா்களே அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது, ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த டிசம்பா் வரை ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கப்படாது என்று அமெரிக்க அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அத்தடை மாா்ச் 31 வரை பின்னா் நீட்டிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றாா். ஹெச்1பி நுழைவு இசைவு வழங்குவதற்குத் தடை விதித்ததை அதிபா் பைடன் நிா்வாகம் நீக்கும் என்று பல்வேறு தரப்பினரும் எதிா்பாா்த்து வருகின்றனா்.

இத்தகைய சூழலில், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் அலெக்ஸாண்ட்ரோ மயோா்கஸ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘ஹெச்1பி நுழைவு இசைவு வழங்குவதற்கான தடையை நீக்குவது தொடா்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. முந்தைய அரசு மேற்கொண்ட பல்வேறு தவறான நடவடிக்கைகளைத் திருத்துவதற்கான பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்’’ என்றாா்.

அதிபா் பைடன் நிா்வாகம் புதிய உத்தரவு பிறப்பிக்கவில்லை எனில், ஹெச்1பி நுழைவு இசைவு வழங்குவதற்கான தடை வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com