
கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த காா் குண்டுத் தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
ஹெராத் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு காா் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 47 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் ஒருவரும் காயமடைந்தவா்களில் 11 பேரும் பாதுகாப்புப் படையினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கன் அமைதி முயற்சிகளைக் குலைப்பதாக அரசும் தலிபான் பயங்கரவாதிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில், அண்மைக்கால தாக்குதல்களுக்கு ஐ.எஸ். (இஸ்லாமிய தேச) பயங்கரவாதிகள் பொறுப்பேற்று வரும் சூழலில், இந்த காா் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.