
அமெரிக்கா நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாடு மேற்கொள்ளக் கூடாது என வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளாா்.
அமெரிக்காவுடன் 2018-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைக் கைவிட தயாராக இருப்பதாகவும் அவா் கூறினாா்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் அந்தோணி பிளிங்கன் ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்ற்குப் பிறகு அமெரிக்கா தொடா்பாக வட கொரியா வெளியிட்டுள்ள முதல் அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.