சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல்: 4 நாள்களாக மீட்க முடியாமல் திணறல்

எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட புழுதி புயலால் சிக்கி நின்ற சரக்குக் கப்பலை மீட்க முடியாமல் கப்பல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் அதனைத் தொடர்ந்து வந்த 150 கப்பல்கள் காத்து நிற்கின்றன.

உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக அறியப்படுவது எகிப்து நாட்டில் உள்ள சூய்ஸ் கால்வாய். உலகின் பல்வேறு நாட்டு சரக்குக் கப்பல்களும் இந்த பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ்கால்வாயில் சென்று கொண்டிருந்த எவர் கிவன் என்னும் சரக்குக் கப்பல் புழுதிப் புயலில் சிக்கி சூயஸ் கால்வாயின் கரைகளில் சிக்கி நின்றது. 

1300 அடி நீளமுள்ள சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கி நின்றுள்ளதால் அந்தப் பாதையில் அதனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த 150 சரக்குக் கப்பல்கள் தற்போது காத்தி நின்கின்றன. 

மணலில் சிக்கி நின்ற எவர் கிவன் கப்பலை மீட்க கப்பல் ஊழியர்கள் முயன்று வருகின்றனர். எனினும் கப்பல் சிக்கிய பகுதியில் உள்ள மண் மற்றும் சேற்றை அகன்ற சில வாரங்கள் ஆகலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

சூயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் சிக்கி நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு 40 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வர்த்தக இழப்பு ஏற்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com