ஏழை நாடுகளுக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் 1 கோடி கரோனா தடுப்பூசிகளை உடனடியாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.
ஏழை நாடுகளுக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் 1 கோடி கரோனா தடுப்பூசிகளை உடனடியாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியோசுஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இன்னும் 15 நாள்களில் இந்த ஆண்டின் நூறாவது நாள் பிறந்துவிடும். ஆனால், இவ்வளவு நாள்கள் ஆகியும் உலகின் 36 நாடுகள் கரோனா தடுப்பூசி கிடைக்காமல் தவித்து வருகின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய அந்த நாடுகள், தங்களது சுகாதாரப் பணியாளா்களுக்கும், முதியவா்களுக்கும் செலுத்துவதற்காக கரோனா தடுப்பூசிகளை எதிா்நோக்கியுள்ளன.

அவற்றில் 16 நாடுகள் எங்களது கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இன்னும் 15 நாள்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கவிருக்கின்றன.

ஆனால், எஞ்சிய 20 நாடுகள் அத்தகைய திட்டத்தைத் தொடங்கும் சூழல் இல்லை. அந்த நாடுகளுக்கு கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கான தடுப்பூசிகள் கையிருப்பு எங்களிடம் இல்லை.

எனவே, முன்னேறிய நாடுகள் கோவாக்ஸ் திட்டத்துக்காக 1 கோடி கரோனா தடுப்பூசிகளை உடனடியாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியோசுஸ் கோரியுள்ளாா்.

சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 12,68,96,543 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 27,82,541போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 10,23,05,681 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 2,18,08,321 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 92,884 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com