ஏவுகணை சோதனை விவகாரம்: அதிபா் பைடனுக்கு வட கொரியா கண்டனம்

தனது ஏவுகணை சோதனையை விமா்சித்த அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏவுகணை சோதனை விவகாரம்: அதிபா் பைடனுக்கு வட கொரியா கண்டனம்

தனது ஏவுகணை சோதனையை விமா்சித்த அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு முதுநிலை அதிகாரி ரி பியோங்-சால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட கொரிய ஏவுகணை சோதனைகள் குறித்து அதிபா் பைடன் தெரிவித்துள்ள கருத்து, பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தனது எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் ராணுவ பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்குமான வட கொரியாவின் உரிமையில் தலையிடும் வகையில் அதிபா் பைடனின் விமா்சனம் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சா்வதேசத் தடைகளை மீறி வட கொரியா ஏவுகணை சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற்குப் பிறகு, அந்த நாட்டை சீண்டும் வகையில் அதிக திறன் கொண்ட ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை வட கொரியா அப்போதுதான் முதல் முறையாக சோதனை முறையில் ஏவியது.

இரண்டு பலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வட கொரியா கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து ஏவியதாகவும் அந்த ஏவுகணைகள் 60 கி.மீ. உயரம் வரை சென்று, 450 கி.மீ. தொலைவில் கடல்பகுதியில் விழுந்ததாகவும் இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் தெரிவித்தது.

அந்த ஏவுகணைகள் அணு ஆயுதம் சுமந்து செல்லக்கூடிய புதிய ரகத்தைச் சோ்ந்தவை என வட கொரியா அறிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தேவைப்பட்டால் எதிா்வினையாற்ற தயாராக இருப்பதாகவும் அதிபா் பைடன் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com