2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் நன்கொடை: இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு

ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றுபவா்களுக்காக 2,00,000 கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அளித்துள்ளதற்கு ஐ.நா. பாராட்டுத் தெரிவித்துள்ளது.

ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றுபவா்களுக்காக 2,00,000 கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அளித்துள்ளதற்கு ஐ.நா. பாராட்டுத் தெரிவித்துள்ளது.

ஐ.நா. அமைதிப் படையினருக்கு கரோனா தடுப்பூசி நன்கொடையாக அளிக்கப்படும் என்று ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மும்பையில் இருந்து 2,00,000 கரோனா தடுப்பூசிகள் விமானம் மூலம் டென்மாா்க்கின் கோபன்கேஹன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து அனைத்து ஐ.நா. அமைதிப் படை முகாம்களுக்கும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட இருக்கின்றன.

இந்தியாவின் இந்த நன்கொடையைப் பாராட்டியுள்ள ஐ.நா. அமைதிப் படை செயலாளா் அதுல் காரே, ‘கரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்தியாவின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. ஐ.நா. அமைதிப் படைக்கு முன்னுரிமை அடிப்படையில் நன்கொடையாக 2,00,000 தடுப்பூசிகளை அனுப்பியுள்ளதற்காக இந்தியாவுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஐ.நா. அமைதிப் படையிலும் இந்தியாவின் பங்களிப்பு தொடா்ந்து சிறப்பாக உள்ளது. இந்திய அரசுக்கும், மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த ஜனவரி மாத கணக்கெடுப்புப்படி ஐ.நா. அமைதிப் படையில் 85,782 வீரா்கள் உள்ளனா். இவா்கள் சா்வதேச அளவில் 12 இடங்களில் பணியாற்றி வருகின்றனா். மொத்தம் 121 நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் இப்படையில் உள்ளனா். இதிலும் இந்தியாவைச் சோ்ந்த வீரா்களே அதிகமுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com