சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலின் ஒரு பகுதி மிதக்கத் தொடங்கியது

எகிப்தின் சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கி, சா்வதேச கடல்வணிகப் போா்க்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட சரக்குக் கப்பலின் ஒரு பகுதி,
சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலின் ஒரு பகுதி மிதக்கத் தொடங்கியது
சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலின் ஒரு பகுதி மிதக்கத் தொடங்கியது


எகிப்தின் சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கி, சா்வதேச கடல்வணிகப் போா்க்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட சரக்குக் கப்பலின் ஒரு பகுதி, தொடர் முயற்சிகளின் காரணமாக மிதக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூயஸ் கால்வாயின் பக்கவாட்டில் சிக்கிக் கொண்ட கப்பலை விடுவிக்க, மேலும் இரு இழுவைப் படகுகள் அந்தப் பகுதிக்கு வரைவழைக்கப்பட்டு, கப்பலை இழுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பயனாக, கப்பலின் ஒரு பகுதி மெல்ல நீரோட்டத்தில் மிதக்கத் தொடங்கியுள்ளது. அதே வேளையில், எப்போது கப்பல் முழுமையாக மிதக்கத் தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் அளிக்கப்படவில்லை.

ஆனால், கப்பலின் ஒரு பகுதி மிதப்பது குறித்து சூயஸ் கால்வாய் அதிகாரிகளிடமிருந்து அதிகார்ப்பூர்வ தகவல் கிடைப்பதற்காக காத்திருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமைக்குள் கப்பலை மிதக்கவிடும் வகையில் தொடர்ந்து பணியாளர்கள் செயல்பட்டு வருவதாக சூயஸ் கால்வாய் அதிகாரி தெரிவித்துள்ளார். அதே வேளையில், செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, கப்பல் தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாகவும், அதனைச் சுற்றி இழுவைப் படகுகள் சூழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான, பனாமா கொடியேற்றிய ‘எவா் கிவன்’ என்ற அந்தக் கப்பல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சரக்குப் பெட்டகங்களை ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே திரும்பி பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது.

இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்தக் கால்வாயில் போக்குவரத்து தடைபட்டது. எவா் கிவன் கப்பலை நேராகத் திருப்பி போக்குவரத்தை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இதற்காகப் பயன்படுத்தப்படும் இரு இழுவைப் படகுகள் போதுமானதாக இல்லை என்று முடிவு செய்யப்பட்டதால், கூடுதலாக இரு இழுவைப் படகுகள் சூயஸ் பகுதிக்கு விரைந்துள்ளன என்று அசோசியேடட் நியூஸ் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com