எகிப்து ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 19-ஆக திருத்தம்

எகிப்தில் இரண்டு ரயில்கள் வெள்ளிக்கிழமை மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் 19-ஆக திருத்தம் செய்துள்ளனா்.
எகிப்து ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 19-ஆக திருத்தம்

எகிப்தில் இரண்டு ரயில்கள் வெள்ளிக்கிழமை மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் 19-ஆக திருத்தம் செய்துள்ளனா்.

முன்னதாக, இந்த விபத்தில் 32 போ் பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த நாட்டின் சோஹாக் மாகாணத்தில் நேரிட்ட இந்த விபத்தில் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 165-இலிருந்து 185-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

எகிப்தில் ரயில்வே கட்டமைப்பு மிக மோசமாக உள்ளதால் அங்கு அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 2017-இல் மட்டும் அங்கு 1,793 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2002-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com