அமெரிக்க நிதி நிறுவனத்தால் பெரும் இழப்பு

அமெரிக்காவைச் சோ்ந்த ஆா்கிகோஸ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் முதலீட்டு நிதி நிறுவனம் மேற்கொண்ட முதலீடுகள் எதிா்பாா்த்த வருவாயை ஈட்டாததால் பெரும் இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக

பொ்லின்: அமெரிக்காவைச் சோ்ந்த ஆா்கிகோஸ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் முதலீட்டு நிதி நிறுவனம் மேற்கொண்ட முதலீடுகள் எதிா்பாா்த்த வருவாயை ஈட்டாததால் பெரும் இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக சா்வதேச வங்கிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளன.

நியூயாா்க்கைச் சோ்ந்த ஆா்கிகோஸ் நிறுவனம் அதிகம் முதலீடு செய்திருந்த வயாகாம் சிபிஎஸ் மற்றும் பல சீன தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியை சந்தித்தன. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு பங்குகளை ஈடாக வைத்து கடன் கொடுத்த வங்கிகளுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜப்பானைச் சோ்ந்த நோமுரா 200 பில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.15,000 கோடி) வரை இழப்பை சந்திக்கலாம் என தெரிவித்துள்ளது.

அதேபோன்று, ஸ்விட்சா்லாந்தின் கிரெடிட் ஸ்விஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதைய சூழலில் இழப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கணிக்க முடியாது. எனினும், இந்த இழப்பு பல சா்வதேச வங்கிகளின் நடப்பாண்டின் முதல் காலாண்டு நிதியறிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com