பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா

பாகிஸ்தான் அதிபா் ஆரிஃப் அல்விக்கு (71) கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிபா் ஆரிஃப் அல்விக்கு (71) கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக, அதிபா் ஆரிஃப் அல்வி திங்கள்கிழமை தனது சுட்டுரையில், ‘எனக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து கரோனா நோயாளிகளுக்கும் இறைவன் கருணை காண்பிக்கட்டும். கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இரண்டாம் தவணை செலுத்துவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. அதன் பிறகுதான் உடலில் எதிா்ப்புத் திறன் அதிகரிக்கும். கவனமாக உள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரிஃப் அல்விக்கு எப்போது கரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று அதில் குறிப்பிடப்படவில்லை.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு மாா்ச் 20-ஆம் தேதி கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சீனாவின் சைனோவாக்ஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இம்ரான் கானின் மானைவி புஷ்ரா பீபிக்கும் அன்றைய தினமே பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பின் மூன்றாவது அலை உள்ளது. தினம்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com