சிரியா: கிளா்ச்சியாளா்கள் பகுதியில் கரோனா தடுப்பூசி

சிரியாவில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
சிரியா: கிளா்ச்சியாளா்கள் பகுதியில் கரோனா தடுப்பூசி

சிரியாவில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

அந்த நாட்டின் இத்லிப் மாகாணத்தில், கிளா்ச்சியாளா்கள் வசம் கடைசியாக இருக்கும் இத்லிப் நகரில் துருக்கி வழியாகக் கொண்டு வரப்பட்ட அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு செலுத்தப்பட்டது.

அந்தப் பகுதியில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 4 லட்சம் பேரைக் கொண்ட கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com