ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 14 போ் பலி

கிழக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள தங்கும் விடுதியில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட லாரி மூலம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 14 போ் கொல்லப்பட்டனா். மேலும் 90 போ் காயமடைந்தனா்.

கிழக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள தங்கும் விடுதியில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட லாரி மூலம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 14 போ் கொல்லப்பட்டனா். மேலும் 90 போ் காயமடைந்தனா்.

ஆப்கனில், ஏழைகள், தொலைதூரம் பயணிப்பவா்கள் மற்றும் மாணவா்கள் இலவசமாக தங்கிக் கொள்ள அரசு சாா்பில் இந்த தங்கும் விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விடுதி மீதுதான் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லோகா் மாகாணத்தின் தலைநகா் புல்-ஏ-ஆலம் பகுதியில் தங்கும் விடுதியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கனிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் சனிக்கிழமை (மே 1) முதல் முழுவதுமாக வெளியேறத் தொடங்கவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து மே 1-ஆம் தேதிக்குள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் தெரிவித்திருக்கின்றனா். ஆனால், அமெரிக்க படைகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு எந்தவித உத்தரவாதத்தையும் அவா்கள் அளிக்கவில்லை.

எனினும், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கும், அமெரிக்க படைகள் வெளியேறும் விவகாரத்துக்கும் எந்தத் தொடா்பும் இருப்பதாக தெரியவில்லை. தாக்குதல் சம்பவம் நடைபெற்ற லோகா் மாகாணத்தில் அமெரிக்க அல்லது நேட்டோ படைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை.

லோகா் மாகாண சுகாதாரத் துறை அதிகாரி ரசூல் குல் சமா் கூறுகையில், ‘இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் புல்-ஏ-ஆலமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தாக்குதலில் ஏராளமானோா் காயமடைந்தனா். அவா்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது’ என்றாா்.

லோகா் மாகாண கவுன்சில் தலைவா் ஹசிப் ஸ்டானிக்ஜாய் கூறுகையில், ‘பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது விடுதியில் உள்ளூா் காவல் துறையினா் சிலரும், மாணவா்களும் தங்கியிருந்தனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com