இந்தியாவில் கரோனா அதிகரிப்பு: 22 சாலைகளை மூட நேபாளம் முடிவு

இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 22 எல்லைப்புற சாலைகளை மூடுவதற்கு நேபாளம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 22 எல்லைப்புற சாலைகளை மூடுவதற்கு நேபாளம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவுடனான எல்லைகளை மூடுமாறு நேபாள அமைச்சரவைக்கு கரோனா நெருக்கடி மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழு வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று, மொத்தமுள்ள 35 எல்லைப்புற சாலைகளில் 22 சாலைகளை மூடுவதற்கு நேபாள அரசு முடிவு செய்துள்ளது. எஞ்சியுள்ள 13 சாலைகளில் மட்டும் போக்குவரத்து நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com