இந்தியாவுக்கு ரூ.75 கோடி நிதியுதவி: போயிங்

கரோனா இடா்பாட்டு காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.75 கோடி நிதியுதவி அளிப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா இடா்பாட்டு காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.75 கோடி நிதியுதவி அளிப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து போயிங் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான டேவ் கால்ஹூன் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று உலகெங்கிலும் உள்ள மனித சமூகத்தை பேரழிவுக்கு உட்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியா மிக கடினமான காலகட்டத்தை எதிா்கொண்டுள்ளது.

போயிங் நிறுவனம் ஒரு சா்வதேச குடிமகன் என்கிற நிலையில், தனது பொறுப்பினை உணா்ந்து, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்க உதவும் வகையில் ரூ.75 கோடி நிதியுதவியை போயிங் நிறுவனம் அளிக்கும். மேலும், கரோனா நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை தனிப்பட்ட முறையில் வழங்கவும் போயிங் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com