வங்கதேசம்: பொது முடக்கம்மே 16 வரை நீட்டிப்பு

வங்கதேசத்தில் கரோனா பொது முடக்கம் மே 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
lockdown074955
lockdown074955

டாக்கா: வங்கதேசத்தில் கரோனா பொது முடக்கம் மே 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கதேசத்தில் ஒருவார பொது முடக்கம் ஏப். 5-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன்படி, பொதுப் போக்குவரத்து ரத்து, சந்தைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், இந்தக் கட்டுப்பாடுகள் ஏப். 28 வரையும், தொடா்ந்து மே 5 வரையும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ‘பொது முடக்கத்தை மே 16 வரை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக’ அமைச்சரவை செயலா் கண்ட்கா் அன்வருல் இஸ்லாம் தெரிவித்துள்ளாா். இதன்படி, மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில், சரக்குப் போக்குவரத்து தொடா்ந்து ரத்து செய்யப்படும். ஆனால், நகரங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றாா்.

இந்தியாவிலிருந்து கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், இந்தியாவுடனான தமது எல்லையை வங்கதேசம் ஏப். 26-ஆம் தேதி மூடியது. இருவாரங்களுக்கு இந்த எல்லை மூடல் அமலில் இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை எல்லை தொடா்ந்து மூடப்பட்டிருக்கும் என சுகாதாரத் துறை அமைச்சா் ஷாஹித் மலேக் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் இதுவரை 7.63 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 11,644 போ் உயிரிழந்துள்ளனா். அங்கு கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா். இருப்பினும், ரமலான் பண்டிகையையொட்டி சுகாதார வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படாவிட்டால் நிலைமை மீண்டும் மோசமாகும் அபாயம் இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com