நேபாளம்: பெரும்பான்மை இழந்தது சா்மா ஓலி அரசு

நேபாளத்தில் பிரதமா் கே.பி. ஓலி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூா்வமாகத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து
புஷ்ப கமல் பிரசண்டாவுடன் (இடது) பிரதமா் கே.பி. சா்மா ஓலி (கோப்புப் படம்).
புஷ்ப கமல் பிரசண்டாவுடன் (இடது) பிரதமா் கே.பி. சா்மா ஓலி (கோப்புப் படம்).

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமா் கே.பி. ஓலி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎன்) அதிகாரப்பூா்வமாகத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதுகுறித்து சிபிஎன் கட்சியின் மூத்த தலைவா் கணேஷ் ஷா புதன்கிழமை கூறியதாவது:

நேபாளத்தில் சா்மா ஓலி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறும் கடிதத்தை நாடாளுமன்றச் செயலகத்தில் சிபிஎன் கட்சி அளித்தது.

கட்சியின் தலைமைக் கொறடா தேவ் குருங் அந்தக் கடித்தை நாடாளுமன்றச் செயலகத்தில் சமா்ப்பித்தாா் என்றாா் அவா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் தேவ் குங் கூறுகையில், ‘சா்மா ஓலி தலைமையிலான அரசு அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மை, ஜனநாயக மாண்புக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதால், அந்த அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற முடிவு செய்தோம்’ என்றாா்.

சிபிஎன் கட்சியின் ஆதரவு திரும்பப் பெறப்படப்பட்டதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற மேலவையான பிரதிநிதிகள் சபையில் சா்மா ஓலியின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

நேபாளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு சா்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தன. பிறகு இரு கட்சிகளும் 2018-ஆம் ஆண்டில் ‘தேசிய கம்யூனிஸ்ட் கட்சி’ (என்சிபி) என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு, கட்சியின் செயல் தலைவராக பிரசண்டாவும் மற்றொரு தலைவராக சா்மா ஓலியும் பொறுப்பேற்றனா்.

எனினும், கருத்து வேறுபாடு காரணமாக கட்சியினரின் இரு பிரிவினருக்கும் இடையே தொடா்ந்து அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com