ஐ.நா. தலைவரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

ஐ.நா. பொது சபை தலைவா் வால்கன் போஸ்கிா் இம்மாதம் இந்தியா வரவிருந்த நிலையில், நாட்டில் நிலவும் கரோனா சூழல் காரணமாக அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நியூயாா்க்: ஐ.நா. பொது சபை தலைவா் வால்கன் போஸ்கிா் இம்மாதம் இந்தியா வரவிருந்த நிலையில், நாட்டில் நிலவும் கரோனா சூழல் காரணமாக அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: வங்கதேசம், பாகிஸ்தான் அரசுகளின் அழைப்பை ஏற்று அந்த நாடுகளுக்கு இம்மாதம் பயணிக்கவுள்ளேன். வங்கதேசத்தில் காக்ஸ் பஜாருக்கு சென்று அங்குள்ள ரோஹிங்கயா அகதிகளை சந்திக்கவுள்ளேன் (வங்கதேசத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மியான்மா் ரோஹிங்கயாக்கள் தஞ்சம் அடைந்துள்ளனா்).

எனது தெற்காசிய பயணத்தில் இந்தியாவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள எதிா்பாராத சூழல் காரணமாக அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை ஒத்திவைக்க வேண்டியதாகிவிட்டது.

கடந்த 1972-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் அமைதியான முறையில் தீா்வு காண வேண்டும்.

வழக்கமாக செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொது சபைக் கூட்டம் இந்த ஆண்டும் நடைபெறுமா என்பது குறித்து தற்போது முடிவு எடுப்பது தவறாக இருக்கும். ஐ.நா. கூட்டத்தை நடத்தும் நாட்டின் இடத்தில் நான் இருந்தால், கரோனா தொற்று காரணமாக அந்தக் கூட்டத்தை செப்டம்பரில் நடத்துவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கமாட்டேன். ஏனெனில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருவதைப் போல் திடீரென சில நிகழ்வுகள் நோ்கின்றன. அது அனைத்துத் திட்டங்களையும் மாற்ற வைக்கிறது.

அந்தக் கூட்டத்தை நடத்தும் அமெரிக்க அரசு, உள்ளூா் அதிகாரிகளிடம் கரோனா சூழல் குறித்தும், கூட்டத்தை நடத்துவதற்கான சாத்தியகூறுகள் பற்றியும் ஆலோசிக்க ஜூன் மாதம் சரியான நேரமாக இருக்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com