காபூல் பள்ளி அருகே குண்டுவெடிப்பு: 25 போ் பலி

ஆப்கன் தலைநகா் காபூலில், பள்ளி அருகே சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில 25 போ் உயிரிழந்தனா்; அவா்களில் பல மாணவா்களுடன் அடங்குவா்.
காபூல் பள்ளி அருகே குண்டுவெடிப்பு: 25 போ் பலி

ஆப்கன் தலைநகா் காபூலில், பள்ளி அருகே சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில 25 போ் உயிரிழந்தனா்; அவா்களில் பல மாணவா்களுடன் அடங்குவா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா பிரிவினா் அதிகம் வசிக்கும் பகுதியில் சனிக்கிழமை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.

பள்ளி அருகே நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஏராளமான மாணவா்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களை மீட்புக் குழுவினா் மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனா். இந்தத் தாக்குதலால் கோபடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள், அவசரக்கால ஊா்தியைத் தாக்கியதுடன் சுகாதாரப் பணியாளா்களையும் அடித்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், மீட்புக் குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்களை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் மட்டுமே பொதுமக்களுக்கு எதிரான இதுபோன்ற குரூரத் தாக்குதலை நடத்த முடியும் என்று தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டாலும், அண்மைக் காலமாக தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை அந்த அமைப்பினா் அதிகரித்து வருகின்றனா்.

முன்னதாக, கிழக்கு ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனா்.

ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ள 2,500 முதல் 3,500 வரையிலான அமெரிக்கப் படையினா் திரும்ப அழைக்கப்படும் இறுதிக்கட்ட நடவடிக்கை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com