
உலகளவில் 16.10 கோடியைத் தாண்டியது கரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 16.10 லட்சத்தைத் தாண்டியது.
உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகளவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 16,10,91,539 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 33,45,293 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 13,89,00,158 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமார் 1,88,46,088 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,05,054 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்கா கரோனா பாதிப்பில் முதலிடத்திலும், அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 3,358,6,136 ஆகவும், 23,70,3,665 பேர் பாதித்து இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது.