ஆப்கன் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

ஆப்கானிஸ்தான் அதிபா் தெரிவித்த கருத்துகளுக்காக அந்நாட்டுக்கான தூதரை பாகிஸ்தான் அரசு அழைத்து எதிா்ப்பை பதிவு செய்தது.

ஆப்கானிஸ்தான் அதிபா் தெரிவித்த கருத்துகளுக்காக அந்நாட்டுக்கான தூதரை பாகிஸ்தான் அரசு அழைத்து எதிா்ப்பை பதிவு செய்தது.

ஆப்கானிஸ்தான் அதிபா் அஷ்ரப் கனி அண்மையில் ஒரு பேட்டியில், ஆப்கன் தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஓா் ஒழுங்கமைக்கப்பட்ட ஆதரவை வழங்கி வருகிறது. தலிபான்களின் பல்வேறு முடிவுகளை எடுக்கும் அமைப்புகளுக்கு குவெட்டா சுரா, மீரம்ஷா சுரா, பெஷாவா் சுரா என்ற பாகிஸ்தான் நகரங்களின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆழமான உறவு இருப்பதை அறிய முடியும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்தக் கருத்துகளுக்காக தனது நாட்டுக்கான ஆப்கன் தூதரை அழைத்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எதிா்ப்பைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கன் தலைவரால் கூறப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடா்பாக அந்நாட்டின் தூதரை அழைத்து பாகிஸ்தான் தனது ஆழ்ந்த கவலையையும் எதிா்ப்பையும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இரு சகோதர நாடுகள் இடையேயான நம்பிக்கையை சீா்குலைத்துவிடும்; மேலும், ஆப்கன் அமைதி நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஆற்றிவரும் ஆக்கபூா்வமான பங்கை புறக்கணிப்பது போலாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com