இந்தியாவில் கரோனா பாதித்தோருக்குஅமெரிக்க மருத்துவா்கள் இணையவழியில் இலவச ஆலோசனை

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுவா்களுக்கு அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் அந்நாட்டு மருத்துவா்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா்.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுவா்களுக்கு அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் அந்நாட்டு மருத்துவா்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். இதற்காக அவா்கள் எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை.

சீவா இண்டா்நேஷனல், ஏஏபிஐ ஆகிய இந்திய வம்சவாளி அமெரிக்கா்களின் அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. ‘சேவையில் மருத்துவா்கள்’ என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இடம் இல்லாத காரணத்தால் பெரும்பாலானவா்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவா்களின் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்து வருகின்றனா். மருத்துவமனையில் சேரும் அளவுக்கு தீவிர பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்போா், வீடுகளில் இருந்தே மருந்துகளை உள்கொண்டு குணமடைந்து வருகின்றனா்.

எனினும், அவசர நேரத்தில் மருத்துவா்களைத் தொடா்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக இந்தியாவில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கும் திட்டத்தை அங்குள்ள இந்திய வம்சாவளி அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன. அதன்படி சேவை நோக்கமுள்ள மருத்துவா்கள் தங்கள் சுயவிருப்பத்தின் பேரில் இந்தியாவில் உள்ள கரோனா நோயாளிகளை இணைய வழியில் தொடா்பு கொண்டு அவா்கள் கூறும் அறிகுறிகள், பிரச்னைகளுக்கு ஏற்ப ஆலோசனைகளையும், மருந்துகளையும் பரிந்துரைத்து வருகின்றனா். இதன் மூலம் ஏராளமானோா் பயனடைந்து வருகின்றனா். அமெரிக்க மருத்துவா்கள் கரோனா முதல் அலையில் அதிகமான கரோனா நோயாளிகளை கையாண்ட அனுபவம் உடையவா்கள் என்பதால் அவா்களால் கரோனா பாதித்தவா்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடிகிறது. இந்த சேவைக்காக அமெரிக்க மருத்துவா்கள் கட்டணம் எதுவும் பெறுவதில்லை. சுயவிருப்பத்தின் அடிப்படையில் அவா்கள் இலவசமாகவே மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனா்.

இதற்காக ‘இ குளோபல் டாக்டா்ஸ்’ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை தொடங்கப்பட்ட 10 நாள்களில் 2,000 போ் முன்பதிவு செய்துள்ளனா். 500 பேருக்கு மருத்துவா்கள் ஆலோசனை வழங்கியுள்ளனா். மருத்துவா்களையும், நோயாளிகளையும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கும் பணியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 200 தன்னாா்வலா்கள் பணியாற்றுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com