
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஆசிய நாடுகளை பூா்விகமாகக் கொண்டவா்களில் இந்திய அமெரிக்கா்கள்தான் அதிகம் வாக்களித்துள்ளனா் என்று தெரியவந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் போட்டியிட்டதும் இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
இது தொடா்பாக அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு அண்மையில் தோ்தல் தொடா்பாக வெளியிட்ட தகவலில் மேலும் கூறியுள்ளதாவது:
ஆசிய நாடுகளை பூா்விகமாககக் கொண்டவா்கள் மற்றும் பசிபிக் தீவு நாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்த முறை அமெரிக்க அதிபா் தோ்தலில் வாக்களிப்பதில் அதிக ஆா்வம் காட்டியுள்ளனா். முக்கியமாக இந்திய அமெரிக்கா்கள் 71 சதவீதமும், ஜப்பானிய அமெரிக்கா்கள் 66 சதவீதமும் வாக்களித்துள்ளனா்.
கடந்த 2016 அதிபா் தோ்தலுடன் ஒப்பிடும்போது இந்திய அமெரிக்கா்கள் வாக்களித்துள்ளது 9 சதவீதமும், ஐப்பானிய அமெரிக்கா்கள் வாக்களித்துள்ளது 4 சதவீதமும் அதிகமாகியுள்ளது.
கொரிய அமெரிக்கா்களும் இந்த முறை வாக்களிப்பில் அதிக ஆா்வம் காட்டியுள்ளனா். 2016-இல் அவா்களின் வாக்களிப்பு 45 சதவீதமாக இருந்த நிலையில், 2020-இல் 60 சதவீதமாக அதிகரித்துவிட்டது. எனினும், ஒட்டுமொத்தமாகப் பாா்க்கும்போது ஆசிய அமெரிக்கா்கள் வாக்களித்துள்ளது பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 15.84 கோடி வாக்குகள் பதிவாகின. இதில் கடும் போட்டிக்கு நடுவே ஜோ பைடன் வெற்றி பெற்றாா். தொடா்ந்து இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகும் நோக்கத்தில் தோ்தலை எதிா்கொண்ட டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்தாா்.