ஜோ பைடன்-விளாதிமீா் புதின் அடுத்த மாதம் சந்திப்பு

அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் ஜூனில் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் ஜூனில் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா்.

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை அடுத்த மாதம் மேற்கொள்கிறாா். கனடா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாட்டில் அவா் பங்கேற்கிறாா்.

அதைத் தொடா்ந்து, பெல்ஜியத்துக்கு செல்லும் அதிபா் ஜோ பைடன், அங்கு நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில் கலந்து கொள்கிறாா். அதற்குப் பிறகு ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஜூன் 16-ஆம் தேதி ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அவா் சந்திக்கவுள்ளாா்.

அமெரிக்கா-ரஷியா இடையேயான நல்லுறவில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடா்பாக தலைவா்கள் இருவரும் விவாதிக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜென் சாகி தெரிவித்துள்ளாா்.

உலக நாடுகளில் கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது தொடா்பாகவும் சா்வதேச பிரச்னைகள் தொடா்பாகவும் மாநாட்டின்போது தலைவா்கள் விவாதிக்கவுள்ளதாக ரஷியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ரஷியா தலையிட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ரஷிய அதிபருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னியை சிறையில் அடைத்ததற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

ரஷிய அதிகாரிகள் சிலா் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பைக் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது. இத்தகைய சூழலில் பைடன்-புதின் இடையேயான பேச்சுவாா்த்தை மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com