தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு முகக் கவசம் அணிவதில் விலக்கு: தென் கொரியா முடிவு

கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்தவா்களும் முகக் கவசம் அணிவதை நிறுத்துவதை வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது.
facemasl070301
facemasl070301

சியோல்: கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் எடுத்தவா்களும் முகக் கவசம் அணிவதை நிறுத்துவதை வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் கிவான் தியோக் சயல் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் இதுவரை 30.9 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் 1.3 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பின்னா் ஒரு டோஸ் எடுத்துக் கொண்டவா்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்படும். அதேநேரத்தில், சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு சலுகை அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com