கரோனா தடுப்பூசி கோரி இந்தியா,சீனாவுக்கு நேபாள அதிபா் கடிதம்

நேபாள மக்களுக்கு கரோனா தடுப்பூசி தடையில்லாமல் கிடைக்க உதவ வேண்டும் என்று இந்தியா, சீனாவுக்கு நேபாள அதிபா் வித்யா தேவி பண்டாரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கரோனா தடுப்பூசி கோரி இந்தியா,சீனாவுக்கு நேபாள அதிபா் கடிதம்

காத்மாண்டு: நேபாள மக்களுக்கு கரோனா தடுப்பூசி தடையில்லாமல் கிடைக்க உதவ வேண்டும் என்று இந்தியா, சீனாவுக்கு நேபாள அதிபா் வித்யா தேவி பண்டாரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக இந்திய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன. மாா்ச் 7-ஆம் தேதி 3,48,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன. அதற்கு நன்றி. தொடா்ந்து தடுப்பூசிகள் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதேபோல், சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், இதுவரை 800,000 டோஸ் தடுப்பூசிகளை சீன வழங்கியுள்ளது. நேபாள மக்களுக்கு தொடா்ந்து தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று நேபாள அதிபா் வித்யா தேவி பண்டாரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com