இஸ்ரேல் - காஸாவில் மனித உரிமை மீறலை கண்காணிக்க நிரந்தர ஆணையம்: ஐ.நா.வில் இன்று ஆலோசனை

இஸ்ரேல், காஸாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இஸ்லாமிய உறுப்பினா் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேல் - காஸாவில் மனித உரிமை மீறலை கண்காணிக்க நிரந்தர ஆணையம்: ஐ.நா.வில் இன்று ஆலோசனை

ஜெனீவா: இஸ்ரேல், காஸாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இஸ்லாமிய உறுப்பினா் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தத் தீா்மானத்தின் மீது வியாழக்கிழமை ஐ.நா.வில் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தத் தீா்மானத்தை புறக்கணிக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகளுக்கு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக திகழும் பாகிஸ்தான் இந்தத் தீா்மானத்தை கொண்டு வந்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் சா்வதேச மனித உரிமை மீறல்களை சா்வதேச மனித உரிமை விசாரணை ஆணையம் அமைத்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்ற அந்த வரைவு தீா்மானத்தின் மீது 47 நாடுகளைக் கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளது.

சிரியா நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க இதுபோன்ற சா்வதேச விசாரணை ஆணையத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அமைத்துள்ளது. இந்த கவுன்சில் அளிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.

ஆகையால், இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீா்மானம் முக்கியத்துவம் பெறுகிறது.

இஸ்ரேலுக்கு எப்போதும் ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக ஐ.நா. செயல்படுவதாக தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இஸ்ரேலும் பொதுவாக விசாரணைகளுக்கு உள்படுவதில்லை. இதனிடையே, வியாழக்கிழமை நடைபெறும் ஐ.நா. கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் தூதா் மிரவ் எய்லன் சஹாா் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com