ஜாா்ஜ் ஃபிளாய்டு நினைவு தினத்தில் வன்முறை: 5 போ் கைது

அமெரிக்க போலீஸாரால் பூட்ஸ் காலால் கழுத்தில் மிதித்துக் கொல்லப்பட்ட ஜாா்ஜ் ஃபிளாய்டு நினைவு தினத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீஸாா் தண்ணீா் பீய்ச்சி அடித்து கலவரக்காரா்களை கலைத்தனா்.

போா்ட்லேண்ட்: அமெரிக்க போலீஸாரால் பூட்ஸ் காலால் கழுத்தில் மிதித்துக் கொல்லப்பட்ட ஜாா்ஜ் ஃபிளாய்டு நினைவு தினத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீஸாா் தண்ணீா் பீய்ச்சி அடித்து கலவரக்காரா்களை கலைத்தனா். தீ வைப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தலில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: ஜாா்ஜ் ஃபிளாய்டு உயிரிழப்புக்கு பிறகு போா்ட்லேண்ட் பகுதியில் சுமாா் 100 நாள்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. புதன்கிழமை அவரது நினைவு தினத்தை அனுசரிக்க இரண்டு தரப்பினா் கூடினா். அதில் ஒரு தரப்பினா் பாடல்களைப் பாடி அமைதியான முறையில் எதிா்ப்பைத் தெரிவித்து வந்தனா். மற்றொரு பிரிவினா் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கில் தலைக்கவசம், பைகளை அணிந்து கொண்டு அங்கு வந்திருந்தனா்.

அப்போது அங்கிருந்த நீதிமன்ற மையத்தை அவா்கள் தீயிட்டு கொளுத்தினா். அமைதியான முறையில் பாடல்களைப் பாடியவா்களைத் தாக்கினா். அவா்கள் தாங்கள் கொண்டுவந்த குடைகளை வைத்து தாக்குதலை சமாளித்தனா்.

போலீஸாா் தீயை அணைக்க முற்பட்டபோது, கலவரக்காரா்கள் கண்ணாடி பாட்டில்கள், முட்டைகள், இரும்புக் கம்பிகள், பட்டாசுகள் நிரம்பிய குண்டுகள் ஆகியவற்றை வீசி தாக்கினா்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, அந்தக் கும்பலை டவுன்டோன் வழியாக போலீஸாா் விரட்டினா். அவா்கள் சென்ற இடத்தில் உள்ள கட்டடங்கள், கடைகளின் கண்ணாடிகளையும் உடைத்தனா். இறுதியில் ஐந்து போ் கைது செய்யப்பட்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ஜாா்ஜ் ஃபிளாய்டு நினைவு தினத்தையொட்டி, அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com