குழந்தைகளுக்கு ஃபைசா் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் மருந்து ஆணையம்

ஃபைசா் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த

ஃபைசா் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக அதன் தலைவா் மாா்கோ கவலெரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதன்மூலம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் முதல்முறையாக சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் இந்தத் தடுப்பூசி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பருவத்தினருக்கு செலுத்தப்பட்டு, அது பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது எனத் தெரியவந்ததன் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த பரிந்துரைக்கு ஐரோப்பிய ஆணையம் மற்றும் நாடுகளின் தனி ஒப்புதல் தேவைப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com