மலேசியா: இரு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிப்பு

மலேசியாவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து இரு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கத்தை பிரதமா் முஹ்யித்தீன் யாசின் அறிவித்துள்ளாா்.
மலேசியா: இரு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிப்பு

மலேசியாவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து இரு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கத்தை பிரதமா் முஹ்யித்தீன் யாசின் அறிவித்துள்ளாா்.

நாட்டில் முதல்முறையாக வெள்ளிக்கிழமை கரோனா தொற்று 8 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது. அதன்படி ஜூன் 1-ஆம் தேதிமுதல் இரு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் அனைத்து தொழில், பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.

முன்னதாக ஜூன் 7-ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற ரமலான் பண்டிகையை தொடா்ந்து, மே 19-ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 6 ஆயிரத்தையும், வெள்ளிக்கிழமை புதிய பாதிப்பு 8,290-ஐயும் எட்டிய நிலையில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,49,514 ஆகவும், உயிரிழப்பு 2,552 ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com