ஆப்கன்: வெளிநாட்டுப் பணங்களுக்குத் தடை

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் பணங்களைப் பயன்படுத்த அந்நாட்டு மக்களுக்கு தலிபான்கள் தடை விதித்திருக்கிறார்கள்.
கோப்புப்படம்-தலிபான்கள்
கோப்புப்படம்-தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் பணங்களைப் பயன்படுத்த அந்நாட்டு மக்களுக்கு தலிபான்கள் தடை விதித்திருக்கிறார்கள்.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைத்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது அங்கிருக்கும் மக்கள் வெளிநாட்டுப் பணங்களை உபயோகிக்கக் கூடாது எனவும் மீறி பயன்படுத்துபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் தலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு சம உரிமை , பொருளாதாரத் திட்டங்கள் , கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த தலிபான்கள் பிற்பாடு எதையும் கருத்தில் கொள்ளாமல் சில அடக்குமுறைகளைக் கையாண்டு வருவதாகவும்  வெளிநாட்டு பணங்களை தடை செய்தால் அதன் மூலம் உருவாகும் பொருளாதார சிக்கல் நாட்டைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே வேலையின்மை , வறுமை . அமெரிக்க டாலருக்கு இணையான ஆப்கன் கரன்சி வீழ்ச்சி என பல சிக்கலில் உள்ள ஆப்கன் இந்த அறிவிப்பால் மேலும் பாதிக்கப்படும் என சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com