சீனாவை அச்சமூட்டும் டெல்டா வகை கரோனா

கடுமையான கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ள நிலையிலும், தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனா சீனாவில் வேகமாக பரவிவருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 2019ஆம் ஆண்டு, சீனாவின் வூஹான் நகரில் கரோனா பரவ தொடங்கியதிலிருந்து, 20 மாதங்களுக்கு மேலாக அங்கிருக்கும் பல்வேறு மாகாணங்கள் கரோனாவை எதிர்த்து போரிட்டுவருகின்றன.

அங்கு கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை உள்ளூர் நிர்வாகம் அமல்படுத்திய நிலையிலும், தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனா சீனாவில் மீண்டும் பரவிவருகிறது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில், 31 மாகாணங்களில் 19இல் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதன்கிழமை மட்டும் 93 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்துள்ளது. 11 பேருக்கு அறிகுறி தென்படாத கரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய சோங்கிங், ஹெனான், கிழக்கு கடற்கரையில் ஜியாங்சு ஆகிய மாகாணங்களில்தான் பெரும்பாலான பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பரவல் இல்லாத மாகாணத்தை பராமரிக்க உறுதி பூண்ட நிலையிலும், முன்னதாக கட்டுக்குள் வைத்த நடவடிக்களை தாண்டியும் டெல்டா வகை வேகமாக பரவிவருகிறது என சீன அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "டெல்டா கரோனாவை ஒழிக்க நடவடிக்கைகள் தேவைப்பட்டது. ஆனால், மற்ற நாடுகள் அதன் கவனத்தை ஒழிப்பதில் செலுத்தாமல் தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்தவதில் செலுத்திவருகின்றன. அதை, எண்டெமிக் நோயாக கருதி அதனுடன் வாழ கவனம் செலுத்துகின்றனர்" என்றார்.

புதன்கிழமைய மட்டும், தலைநகரம் பெய்ஜிங்கில் ஒன்பது பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதில் ஒருவருக்கு அறிகுறி தென்படாத கரோனா உறுதியாகியுள்ளது. கரோனா அலை காரணமாக, மொத்தம் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி, பிப்ரவரியில் டெல்டா கரோனா பரவ தொடங்குவதற்கு முன்பிருந்ததை விட அது அதிகம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com