அணு ஆயுதங்களை பெருக்கும் சீனா; மூன்றாம் உலக போருக்கான அச்சாரமா?

2030ஆம் ஆண்டுக்குள், சீனா 1,000 அணு ஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எதிர்பார்த்ததைவிட, சீனா அணு ஆயுதங்களை அதி விரைவாக பெருக்கிவருகிறது என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு இணையாக சீனா அணு ஆயுதங்களை குவித்துவருகிறது. 

இதுகுறித்து பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், "2027ஆம் ஆண்டுக்குள், 700 அணு ஆயுதங்களை சீனா தயாராக வைத்திருக்கும். 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கும். ஓராண்டுக்கு முன்பு கணித்ததைவிட 2.5 மடங்கு அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும்.

நிலம், கடல், காற்று ஆகியவைற்றை சார்ந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதிலும் அணு ஆயுத படைகளின் விரிவாக்கத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் சீனா முதலீடு செய்துவருகிறது. 

அமெரிக்க, ரஷ்யா ஆகிய முன்னணி அணு ஆயுத நாடுகளை போன்று அணு ஆயுத முப்படைகளை சீனா கட்டமைத்துவருகிறது. அதாவது, நிலத்திலிருந்து பெரும் தொலைவிற்குப் பாயும் ஏவுகணைகள், வானிலிருந்து பாயும் ஏவுகணைகள், ஆழ்கடலில் இருந்து பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றை தயாரித்துவருகிறது.

சீனாவின் அணு ஆயுத எதிரி நாடுகளில் முதன்மை நாடான அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளும் திறனை வளர்த்து கொள்ள அந்நாடு முயலவில்லை. ஆனால், மற்ற நாடுகள் தாக்கதல் நடத்தாதவாறும் அப்படி நடத்தப்பட்டால் பின் விளைவுகள் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்துதல் விடுப்பதற்காகவும் சீனா இப்படி செய்துவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் ராணுவ வளர்ச்சி குறித்த அறிக்கையை அமெரிக்க பாதுகாப்புத்துறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், சீனாவின் ராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவிடம் 200 அணு ஆயுதங்கள் தயாராக இருக்கிறது என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் பென்டகன் ஓராண்டுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

மேற்கு சீனாவில் புதிய அணு ஏவுகணைக் குழிகள் பற்றிய செயற்கைக்கோள் புகைப்படங்களை சுதந்திர ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். சீனாவின் அணு ஆயுத விரிவாக்கம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க உயர்மட்ட அலுவலர் ஒருவர், "இது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அவர்களின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com