புற்றுநோய் ஆய்வாளர் கமல் ரணதிவே பிறந்த நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்!

புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் பிரபலமான இந்திய உயிரணு உயிரியலாளர் டாக்டர் கமல் ரணதிவே பிறந்த நாளையொட்டி, சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு கூகுள் கௌரவித்துள்ளது. 

இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் கமல் ரணதிவே, புற்றுநோய் ஆராய்ச்சிக்காகவும், அறிவியல் மற்றும் கல்வியின் மூலம் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பிற்காகவும் இந்திய மக்களிடையே பிரபலமானவர். உயிரணு உயிரியலில் மருத்துவப் பட்டம் பெற்ற அவரின் ஆராய்ச்சி புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் பயன்பட்டு வருகிறது. 

மார்பகப் புற்றுநோய்க்கும் மரபுவழிக்கும் இடையேயும் அதுபோல புற்றுநோய்களுக்கும் சில வைரஸ்களுக்கும் இடையேயும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தவர். 

மருத்துவம் பயின்று நம்முடைய சமூகத்தினருக்கு சேவையாற்ற வேண்டும் என்று இந்திய மாணவர்களை தொடர்ந்து ஊக்குவித்து பலரை மக்கள் பணியில் ஈடுபடுத்தியவர். 

1917ல் புணேவில் பிறந்த டாக்டர் கமல் ரணதிவே-வுக்கு இன்று 104 ஆவது பிறந்தநாள். இதையொட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு அவரை கௌரவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com