குழந்தைகளின் துணி பார்சல்களிலிருந்து பரவும் கரோனா? சந்தேகம் கிளப்பிய சீனா

ஜின்ஜி, ஜின்ஜோ ஆகிய நகரங்களிலும் ஷென்ஸே பகுதியிலும் பார்சல் சேவை முடக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த பார்சல்களிலும் கரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சீனா தீவிரமான கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மிகப் பெரிய அளவில் வருடாந்திர இணைய ஷாப்பிங் நடைபெற்றுவரும் நிலையில், துணி பார்சல்களிலிருந்து கரோனா பரவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வடகிழக்கில் ஹெபெய் மாகாணத்தில் குழந்தை துணி தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் மூன்று பணியாளர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 1200 மைல்கள் தூரத்திலிருந்து துணிகளை ஆர்டர் செய்த மக்களுக்கு பார்சல்கள் விநியோகிக்கப்பட்டிருந்தால், அவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குவாங்சியில் அமைந்துள்ள சுகாதார ஆணையம், சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவும் சூழலை "கரோனா தொடர்பான விநியோக சங்கிலி" எனக் குறிப்பிட்டுள்ளது. பெய்ஜிங்கை சுற்றியுள்ள ஹெபெய் மாகாணத்தில், ஹௌஹூய் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட 300 துணி பார்சல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஜின்ஜி, ஜின்ஜோ ஆகிய நகரங்களிலும் ஷென்ஸே பகுதியிலும் பார்சல் சேவை முடக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த பார்சல்களிலும் கரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை. பார்சல் போன்றவற்றிலிருந்து கரோனா பரவாது என சர்வதேச சுகாதார அமைப்புகள் தெரிவித்திருந்தபோதிலும், சீனாவில், உறைந்த உணவு உள்பட இறக்குமதி செய்யப்படும் சரங்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமின்றி, வெளி்நாடுகள் மற்றும் உள்நாட்டிலேயே பரவல் அதிகமாக உள்ள இடங்களிலிருந்து எடுத்துவரப்படும் பார்சல்கள் மீது சானிடைசர் தெளிக்கப்படுவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.

கரோனா அபாயம் குறைவான இடங்களிலிருந்து பார்சல்கள் வரும்போது கூட, முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து அதை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட்டை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை போல் அல்லாமல் கரோனா பூஜ்ய நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. 

டெல்டா வகை கரோனாவால் 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com