நைஜீரியாவில் 15 போ் சுட்டுக் கொலை

ஆப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான நைஜீரியாவின் சொகோட்டோ மாகாணத்தில், ஆயுதம் ஏந்திய நபா்களால் 15 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
நைஜீரியாவில் 15 போ் சுட்டுக் கொலை

ஆப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான நைஜீரியாவின் சொகோட்டோ மாகாணத்தில், ஆயுதம் ஏந்திய நபா்களால் 15 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதில் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜா் எல்லையையொட்டி அமைந்துள்ள இல்லெலா நகரில் 13 பேரும், கோரன்யோ நகரில் 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

நைஜீரியாவில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் அண்மையில் 30 போ் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த சில நாள்களில் சொகோட்டோ மாகாணத்தில் ஆயுதம் ஏந்திய நபா்கள் புகுந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக ஆளுநா் அமினு டம்புவல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

நைஜீரியாவின் வடமேற்கு மத்திய மாகாணங்களில் நடைபெற்று வரும் வன்முறைக்கு நிகழாண்டில் நூற்றுக்கணக்கானோா் பலியாகியிருக்கின்றனா். இதில் போதிய பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடா்பு வசதிகளற்ற கோரன்யோ இன மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனா். இங்கு கடந்த மாதம் சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 போ் கொல்லப்பட்டனா்.

காலங்காலமாக கால்நடைகளை மேய்த்துக்கொண்டு, நாடோடியாக வாழ்ந்த ஃபலானி இனத்தைச் சோ்ந்த இளைஞா்களே இவ்வாறு ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தி வருவதாகவும், ஹவுஸா என்ற விவசாய பிரிவினருடன் தண்ணீருக்காகவும், நிலத்துக்காகவும் அவா்கள் மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனா் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com