வண்ண விளக்குகளால் மிளிரும் லண்டன்

வரலாற்றில் முதல்முறையாக, லண்டன் நகரில் உள்ள இருபது தெருக்களில் கிறிஸ்துமஸ் வண்ண விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டன. 
லண்டன் தெருக்களில் வண்ண விளக்குகள்
லண்டன் தெருக்களில் வண்ண விளக்குகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில், உள்ளூர் மக்கள் ஷாப்பிங் செய்ய இந்த வண்ண விளக்குகள் கவர்ந்திழுக்கும் என வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு லண்டனில் உள்ள ரிஜென்ட் தெருவிலும், வரலாற்று சிறப்பு மிக்க இந்த இருபது தெருக்களில் ஏற்றப்பட்டதுபோல் ஒரே நேரத்தில் வண்ண மிக விளக்குகள் மிளிர வைக்கப்பட்டன.

கிறிஸ்துமஸை முன்னிட்டு, பிரிட்டன் தலைநகர் லண்டனில் வெவ்வேறு நாள்களில் வெவ்வேறு தெருக்களில் விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். ஆனால், முதல்முறையாக ஒரே நேரத்தில் அனைத்து தெருக்களிலும் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.உள்ளூர் வணிக அமைப்பான, தி ஹார்ட் ஆப் லண்டன் பிஸ்னஸ் அல்லயனஸ் இந்த வண்ண விளக்குகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஆக்ஸ்போர்டு தெருவில், நட்சத்திர வடிவில் வண்ண விளக்குகள் வடிவமைக்கப்பட்டு மிளிர வைக்கப்பட்டன. பெரும்பாலான பெரிய வணிக நிறுவனங்களின் ஜன்னல்களில் வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படவில்லை. ஆனால், திருவிழா கொண்டாட்ட மன நிலைக்கான சமிக்ஞைகள் அங்கு தென்பட தொடங்கியுள்ளன.

மேலும் வெப்பநிலை மெதுவாக குறைந்து வரும் நிலையில், பிரிட்டன் குளிர்காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வெளியே சென்று ஹாப்பிங் செய்வதற்கு மக்களுக்கு அற்புதமான காலமாக மாறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com