Enable Javscript for better performance
கலிபோர்னியாவில் பணமழை; குதூகலத்தில் மக்கள்- Dinamani

சுடச்சுட

    கலிபோர்னியாவில் பணமழை; குதூகலத்தில் மக்கள்

    By DIN  |   Published on : 21st November 2021 04:11 PM  |   அ+அ அ-   |    |  

    Money_rain

    கோப்புப்படம்

    உலகில் பெரும்பாலானோர் பணத்தை சுற்றிதான் சுழன்று கொண்டிருக்கிறோம். கனமழை பெய்வதற்கு பதில் பண மழை பெய்திருந்தால் எப்படி இருந்திருக்கும். இது, தெற்கு கலிபோர்னியாவில் நிஜமாக நிகழ்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் பயணித்த மக்கள், சாலையில் சிதறி கிடந்த பணத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அனைவரும் வாகனங்களை நடுவழியில் நிறுத்திவிட்டு, பணத்தை எடுத்திட அலைமோதினர். இதனை விடியோவாக எடுத்து பகிர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் டெமி பேக்பி, " இது மிகவும் விநோதமான நிகழ்வு. யாரோ பணத்தை சாலையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். 

    சான்டியோகாவே முடங்கியுள்ளது. மக்கள் முந்தியடித்து கொண்டு சாலையில் கிடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பணத்தை ஆர்வமுடன் எடுப்பதைக் காண முடிகிறது" என்றார். 

    இவ்வழியாக டிரக் ஒன்றில், பணக்கட்டுகள் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அப்போது ட்ரக்கின் கதவு திடீரென திறந்ததில் பணக்கட்டுகள் சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சாலையில் எடுத்த பணத்தை திருப்பி தராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

    இதுகுறித்து கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து (CHP)அலுவலர் சார்ஜென்ட். கர்டிஸ் மார்ட்டின் கூறுகையில், "இச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணியளவில் நடந்துள்ளது. சான் டியாகோவிலிருந்து ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் அலுவலகத்திற்கு சென்ற டிரக்கின் ஒரு கதவு திறந்ததில், பணப் பைகள் கீழே விழுந்துள்ளன. 

    1 டாலர் மற்றும் 20 டாலர் நோட்டுகள் சாலையில் சிதறியுள்ளது. பணத்தை எடுத்தவர்கள் உடனடியாக திருப்பி தர வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர். 

    இதையடுத்து, பலர் பணத்தை திருப்பி அளித்ததாகவும், ஒரு சிலர் பணத்தை இன்னும் திரும்பிக் கொடுக்கவில்லை. 

    சமூக வலைதளங்களில் பணம் எடுக்கும் புகைப்படங்கள், விடியோக்கள் உள்ளன. அதனடிப்படையில், உங்களின் முகம் மற்றும் வாகன விவரங்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறை திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய எஃப்பிஐயுடன் கைகோர்த்துள்ளது.

    இதையும் படிக்க''எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி'': 'ஜெய் பீம்' படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து சூர்யா நெகிழ்ச்சி

    கிடைத்த தகவலின்படி, காவல் துறை எச்சரித்தும் பணத்தை தராத இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக, 2018இல் இதே மாதிரியான நிகழ்வு நியூ ஜெர்சியில் நடந்துள்ளது. அப்போது, ட்ரக்கில் பின்கதவு பழுதடைந்ததில், ரூபாய் நோட்கள் சாலையில் சிதறியது குறிப்பிடத்தக்கது


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp