லிதுவேனியாவின் தூதரக அந்தஸ்து குறைப்பு

லிதுவேனியாவில் தைவான் பிரதிநித்துவ அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதரக
லிதுவேனியாவின் தூதரக அந்தஸ்து குறைப்பு

லிதுவேனியாவில் தைவான் பிரதிநித்துவ அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதரக அந்தஸ்தை ‘இடைக்கால தூதரகம்’ என்ற நிலைக்கு சீனா குறைத்துள்ளது. ஏற்கெனவே, லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்ததுடன் அந்த நாட்டின் தூதரை சீனா வெளியேற்றியுள்ளது. இந்த நிலையில், இருநாட்டு உறவில் இந்த முடிவு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தைவானை தங்களது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதி வருகிறது. ஆனால், அந்தப் பிரதேசத்துக்கு மறைமுகமாக தனி நாடு அங்கீகாரம் அளிக்கும் வகையில், தைவானுக்கான பிரதிநிதித்துவ அலுலவகத்தை தங்கள் நாட்டில் திறக்க லிதுவேனியா அனுமதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com